IVVALAVU NALLAVANGALA ELLORUM CONSTABLE AVIRA? vERY TOUCHING KR On Sat, 15 Jun 2024 at 11:55, Rama <[email protected]> wrote:
> தகப்பன்சாமி💗💗 > > பெண்ணை பெற்ற தகப்பனாக கண் கலங்கியது.. > > "என்னங்க மூட்டை" > > "ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க, அதான் கொஞ்சம் மளிகை > சாமான் வாங்கிட்டு வந்தேன்" > > ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் > > ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு > > ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் > வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க > > இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன் > > அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல > அதானே > > வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு > வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன் > > அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட > முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. > 1000 ரூவா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க > > சரி, எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி > போவீங்க. > > சைக்கிள்ல போவேன் > > ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா > > நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ > > இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம் > > இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன் > > போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை > தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் > வரப் போறீங்க > > நல்ல வார்த்தையே பேச மாட்டியா > > ஐயையோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும். > > சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு > > அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் > சாப்பிட்டு வாங்க > > சரி நான் கிளம்புறேன் > > சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் > உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும் > > அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் > வைத்துக் கொண்டு கிளம்பினார் > > ஒரு பத்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே திருவந்திபுரம் கெடிலம் ஆற்று > பாலத்தை தாண்டிய சாலையில் தடுப்பு அமைத்து போலீஸ்காரர்கள் நின்று > கொண்டிருந்தார்கள். > > மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி > கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் > போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ. > > பயம் தொற்றிக் கொண்டது. > > அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார் > > என்னா பெருசு எங்க கிளம்பிட்டே > > ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு > போறேங்கய்யா > > சைக்கிளை ஓரமாக நிறுத்து. அந்த மூட்டைய தூக்கிட்டு வா > > அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது > > மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே > வைத்தார் > > யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் > பாரு > > அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் > கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார் > > என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க > > ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு. மாப்பிள்ளை டிரைவரா > இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை > சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா > > ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே > > தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. > அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா > > என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு > > 63 வயசு ஆகுதுங்கய்யா > > அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் > கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது. > > கான்ஸ்டபிள் வந்தார். > > சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார் > > உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற > > சாரி சார் > > அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார். > > பெரியவரே சாப்பிட்டீங்களா > > இல்லீங்க சார் > > கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு எடுத்து குடு > > ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன் > > சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல, > > சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார் > > அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க. இது சும்மா பிரிஞ்ஜி தான். > சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க > > சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ > > ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது. > > நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார். > > கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் > பாட்டிலையும் வாங்கிக்கொண்டார். > > பெரியவரே அதோ அந்த மரத்தடி இருக்குல்ல. இல்லன்னா அந்த கடைவாசல் இருக்குல்ல > அங்க உக்காந்து சாப்பிடுங்க. > > இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார் > > பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா > > இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார். > > சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. > இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம். > > பெரியவரே சாப்பிட்டீங்களா > > சாப்பிடங்கய்யா > > ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா > > ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா > > சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது > வாலண்டியர்ஸ் போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி > அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் > வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர். > > இந்த பனியனை போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க. > > அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார். > > இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார். > > சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். > > * > > அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. > > பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். > > பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார். > > மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு > > என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல > > இல்லம்மா. இன்னொரு நாளைக்கு கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க > இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா > தனியா இருக்கும். > > அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா > > நான் சாப்பிட்டேன்மா > > ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா > > நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார் > > பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார் > > மகள் ஒரு பையோடு வந்தாள். > > அப்பா பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட > கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா. > அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம > குடுத்துடுங்கப்பா. > > பையை வாங்கிக்கொண்டார். > > மாப்பிள்ளை எங்கம்மா > > அப்பா அரசாங்கத்துல காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. > அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா > > இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு > > போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா > > அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் > சட்டைப்பையில் இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார் > > அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் > கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா > அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க > என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா. > > சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா. > > அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை > நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்... > > படித்ததில் பிடித்தது. > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorFAB%3D-Fxn5uiGT%2B8Y5cfJePUkWsNzt5vDp-SPrY1BXwA%40mail.gmail.com.
