புராணங்களில், சோழருக்கும் முன், மனு நீதியில் கூட, உண்மையான
குற்றங்களுக்கும், உண்மைக்கு புறம்பாக குற்றம் சாற்றப் பெற்றவர்களுக்கு கூட,
கழுமரம் ஏற்றிய கதைகள் உண்டு
Bribe existed in many manners; why taking karnan by duryodhana was what?
employment? Giving Kingdom?
KR IRS  2424

On Tue, 2 Apr 2024 at 12:39, Chittanandam V R <[email protected]>
wrote:

>
> *லஞ்சம் - சுஜாதா கட்டுரை*
>
> லஞ்சம் என்பதற்கு தூய தமிழ்ச் சொல்லாக ‘கையூட்டு‘ என்பதைப்
> பயன்படுத்துகிறார்கள்.
>
> எனக்குத் தெரிந்தவரை இந்தச் சொல் 1910-ல் கோபிநாத்ராவின் ‘சோழ வம்ச
> சரித்திரச் சுருக்கம்‘ என்ற புத்தகத்தில் முதலில் வந்துள்ளது. லஞ்சம், சோழர்
> காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள்
> இருப்பதை நீலகண்ட சாஸ்திரியின் ‘The Cholas‘ல் காணமுடிகிறது. சோழர் காலத்தில்
> அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து
> நூறு பிரம்படி கொடுத்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சில சமயங்களில்
> தலையையும் கொய்திருக்கிறார்கள்… அல்லது யானையால் மிதித்திருக்கிறார்கள்.
> ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோயிலுக்கு ஒரு
> வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதும் என்று கொலைக்குற்றங்கள்கூட
> மன்னிக்கப்பட்டிருக்கின்றன. இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைத்
> தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
>
> இப்போதெல்லாம் ‘இவர்கள்‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப்
> போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போல திரும்பி வந்து,
> போஸ்டர் ஒட்டி விழாக் கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் ஆராய்ந்தால் லஞ்சம் சங்க
> காலத்திலிருந்து இருக்கிறதை யூகிக்கலாம்.
>
> நவீன இந்தியாவில் லஞ்சம் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்தது. திவான் பஹதூர்,
> ராவ் பஹதூர், ராவ் சாஹிப் பட்டங்கள் எல்லாம் கொடுப்பதில் பின்னணி இருந்தது.
> ஆங்கிலேயர்கள் நம்மைத் திறமையாக ஆள்வதற்கு, அடக்குவதற்கு லஞ்சம் பயன்பட்டது
> என்றும் சொல்லலாம். சிரஸ்தார், தாசில்தார் போன்றவர்களின் லஞ்சங்களை
> வெள்ளைக்காரன் பெரிதாக மதிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் ‘சம்பளம்
> எவ்வளவு.. கிம்பளம் எவ்வளவு‘ என்பதுதான் அப்பவே பொது வழக்காக இருந்தது.
>
> லஞ்சம் – தெலுங்கு வார்த்தை. லஞ்சலம் என்றால் விலைமகள். அதற்கும் இதற்கும்
> சம்பந்தமிருக்கிறதா என்று யாராவது ஆராயலாம். தற்போது இருக்கிறது.
>
> லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அதிகாரிகள்
> கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால்
> பண்டமாற்று. ‘வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்‘ என்று குமரேச
> சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை
> வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்… எல்லாம் நாட்டின், இணைப்
> பொருளாதாரத்தின் அங்கங்கள்.
>
> மேற்கண்ட வரையறையில் உள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய
> வேறுபாடு – லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை,
> மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். மேலும் கடமையைச்
> செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அதிகாரிகளை நாம் அதட்டலாம்.
> வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள்.
>
> முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை.
> ஒரு என்ஓசி கொடுக்கவோ, ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்கவோ, ஒரு பாஸ்போர்ட்
> எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை.
> இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்றொரு நாள் வரவேண்டும்.
> அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதனால் இது
> நியாயமானதாகப் படலாம்.
>
> இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக்
> குறைக்க மற்றொருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள். உமக்கு முன்னே வந்து
> காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத
> கிச்சாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச்
> சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு ‘ஸாஷே‘ (sachet)அளவு பாவம்தான். ரயில்வே
> புக்கிங் ஆபீஸில் நாற்பது பேர் க்யூவில் நின்றுகொண்டிருப்பார்கள். உள்ளே
> சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கவுண்டர் அருகில் வந்து
> முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்தபின் கிளார்க்கை விசாரித்து பான்பராக்
> பரிமாறிக்கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார். இதை மற்ற
> பேர் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பி.பி-காரர் மட்டும் லேசாக எதிர்ப்பார்.
> க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் – இந்திய தேசிய குணம். சில வேளைகளில் மற்றவர்
> எதிர்ப்பார்கள். பல வேளைகளில், ‘நமக்கேன் வம்பு‘ என்று விட்டுவிடுவார்கள்.
> Apathy சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.
>
> இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய
> பணம் ஒரு சர்க்கார் அதிகாரிக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல
> வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல்,
> அதிகாரி ஒரு க்வார்ட்டர் அடிப்பதற்கோ, அவர் மகன் காப்பிட்டேஷனுக்கோ, மனைவி
> நகைக்கோ உதவுகிறது.
>
> இவ்விரண்டு வகையில்தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது.
> கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள் – பர்த் சர்ட்டிபிகேட்,
> டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அதிகாரிகளின் கையெழுத்து
> தேவைப்படும் எந்தச் செயலும்.
>
> கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள் – தரக்குறைவான பாலத்துக்கு இன்ஸ்பெக்ஷன்
> சர்ட்டிபிகேட் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட்
> பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய
> கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, சர்க்கார்
> நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க
> அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம்
> ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.
>
> முதல் வகையான ‘பெட்டி கரப்ஷன்‘ (petty corruption) என்பதை ஒழிக்க மக்களுக்கு
> கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி
> அரசுக் கட்டுப்பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன்
> பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரம் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க
> வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா
> கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம்
> பேறாது என்று ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.
>
> மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு
> நல்ல உதாரணம் – ரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த
> அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில்
> கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம்
> கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது.
>
> அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அதிகாரிகளும்,
> அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். ‘ட்ரான்ஸ்பெரண்ட் கவர்ன்மெண்ட்‘
> (transparent government) என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப ஃபாரங்களும் ஒரு
> பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.
>
> இரண்டாவது லஞ்சம்தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய
> முடியாது. ‘தெஹல்கா‘(Tehelka) போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி
> பயன்படும். இதில் அதிகாரிகள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள்.
> சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள்தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின்
> சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அதிகாரி – ஒரு
> இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள்
> கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட
> மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது
> நடக்கவில்லை என்றால், தவறாமல் கோர்ட்டுக்குப் போக வேண்டும். டாஸ்டாயவ்ஸ்கியின்
> கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக – 91 வயதில்!
>
> அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் சுத்தமாக இருந்தால் அதிகாரிகள் லஞ்சம்
> வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம்
> தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல
> குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும்
> நல்லது. பணத் தேவை இருக்காது.
>
> இதைவிட்டால் ஆரம்பத்தில் சொன்னவாறு சோழ ராஜா காலத்து தண்டனை முறைதான்
> பயனளிக்கும். என்ன, அதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு யானை வாங்க வேண்டும்!
>
> *******************************************
>
> அந்நியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி சுஜாதா:
>
> "அஞ்சு பைசா லஞ்சம் வாங்குறது தப்பா?"
>
> "தப்பு இல்லைங்க "
>
> "அஞ்சு லட்சம் பேரு, அஞ்சு லட்சம் தடவை அஞ்சு பைசா லஞ்சம் வாங்கினா...??"
>
> "தப்பு மாதிரிதான் தெரியுது,"
>
> "அதுதாண்டா நடக்குது இங்க."
>
> ======================================
>
> "ஏங்க, ஒலகத்துல என்னவோ யாருமே லஞ்சம் வாங்காத மாதிரி சொல்றீங்களே,
> இந்தியாவுல மட்டும்தான் லஞ்சம் வாங்குறாங்களா என்ன?"
>
> "லஞ்சம் ஒலகம் பூரா இருக்குடா, என்ன, மத்த நாடுகள்ல கடமையை் மீறத்தாண்டா
> லஞ்சம், இங்க, கடமையைச் செய்யவே லஞ்சம் வாங்குறீங்க."
>
> *- சுஜாதா*
> ******************************************** *
>
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqtHW9VUsccJwZc03HKZvcyLbmEbjyjW07Q8jOhdz5F7g%40mail.gmail.com.

Reply via email to